Thursday, June 24, 2010

என்னவென்று சொல்வது...

பல ஆண்டுகளாய்
சேமித்து வைத்த
உடல் நோய்களை,
மனக் குறைகளை,
ஒரே பார்வையில்...
ஒரே தொடுதலில்...
ஒரே உரையாடலில்...
தீர்க்கின்ற உனை
கடவுள் என்று
சொல்லமல் வேறு
என்னவென்று சொல்வது.

- யாரோ

Monday, June 21, 2010

பைத்தியம்...

உன்னைப் பிடித்த பிறகுதான்
என்னைப் பிடித்துக்கொண்டது...
பைத்தியம்!

- ஜிமு

Wednesday, June 9, 2010

உனக்கென வாழ்வேன்....

உடல் எனும் கூட்டுக்குள் ஒடுங்கி
உள்ளம் எனும் சிறைக்குள் பதுங்கி
நான் வாழ்ந்த வாழ்வில்...

கவலை எனை கிள்ளித் தின்றது... (மணிப்பூரகம்)
பொறாமை எனை அள்ளித் தின்றது... (விசுத்தி)
மிச்சமின்றி அச்சம் ஆட்கொண்டது... (சுவாதிஷ்டானம்)
அன்பின்றி நெஞ்சம் வறண்டது... (அனாகதம்)
காமம் உடலை வேகச் செய்தது... (மூலாதாரம்)
நன்றியும் குன்றி நாளானது... (சஹஸ்ராரம்)
அகம் காரம் ஆனதில் நான் சோரம் போனேன்... (ஆக்ஞா)

மொத்தத்தில் வெய்யிலில் வெடித்த களிமண்ணாய்,
இறுகிய உணர்வுக்குள் கறுகிக் கொண்டிருந்தேன்.

கோடையில் வந்த திடீர் மழையாய்...
கரை உடைத்தோடிவரும் காட்டு வெள்ளமாய்...
சத்தமாய் அடிக்கும் அலைபோல்... - என்
அறியாமையின் மீது சுனாமியாய் மோதினாய்.

மொத்தமாய் விழுந்தவன்,
சுத்தமாய் எழுந்தேன் - மீண்டும்
புதிதாகப் பிறந்தேன் - இனி
உனக்காக வாழ்வேன்.

- யாரோ

Thursday, June 3, 2010

அதிசயம்

உலகுக்கென்று,
பேரதிசயம் ஒன்றை நிகழ்த்தினாய்!
கொடுஞ்சிறையாம் மனச்சிறையை உடைத்தாய்...

தனக்கென்று,
ஒரு அதிசயமும் நிகழ்த்தவில்லை!
அற்பச்சிறையாம் இரும்புச்சிறையைக்கூட
தகர்க்கவில்லை...

- ரூபன்

அன்பு மழை

மழையைப் பார்த்தேன்...
மனதில் நினைவு வந்தது,

என் குரு
என்னில் பொழிந்த அன்பு....

- சரண்

சரிதம்

ஆதியில் நிலைத்தவன்
ஜோதி மலையினில் பிறந்தாய்...
உண்மைப் பொருளறிய
காடு மலைதனில் நடந்தாய்.

ஐந்து கரத்தானுக்கு
அன்று சோறூட்டினாய் - அவன்
தந்தை சங்கரன் கரங்களால்
சோறூட்டப்பட்டாய்.

அருணகிரி யோகியின்
அவதாரமாய் வந்தாய்...
அழியா தேகம் கொண்டவனால்
திருநாமம் கொண்டாய்.

கண்ணனின் தரிசனத்தை
பிருந்தாவனத்தில் கண்டாய்...
மரணத்தின் தலைவனை
மணிகர்னிகையில் வென்றாய்.

பிறப்பின் நோக்கம் முழுதாய் உணர்ந்தாய்...
பிறப்பை அறுக்கும் தொழிலைக் கொண்டாய்.

வாழ்க நீ! வாழ்க நீ! வாழ்க நீ!


- யாரோ -

Monday, May 31, 2010

நீயும்... நானும்...

நீ என்ன பாவம் செய்தாயோ...
என்னை சீடனாய் பெற்றிருக்கின்றாய்.

நான் என்ன புண்ணியம் செய்தேனோ...
உன்னை குருவாய் பெற்றிருக்கின்றேன்.


- சரண்

மனிதனே அழு

மனிதனே அழு..
புத்தனை இழந்ததற்க்கல்ல...
ஏசுவை இழந்ததற்க்கல்ல...
விவேகானந்தரை இழந்ததற்க்கல்ல...

இன்றும் நீ இழக்கிறாயே
அதற்காக...
இன்னொருமுறை அழு.

 - ஒரு தமிழன்

சிறை...

அகமே சிறை என்றறிந்தும்
மானுட மனச்சிறை தகர்க்க - அகமே
புகுந்தாய் நின் கருணையினால்...

மனமே சிறை என்றறியாமல்
நின் செயல் விளங்கா மானுட ஜென்மம் - நின்னை
புறச்சிறை தள்ளி நகைத்தது பொறாமையினால்...

அவர்களுக்கு தெரியுமா?....
எல்லையில்லா நின்னுள்தான்
எல்லாமே இருக்கிறது என்று....

- ஓர் அங்க தேவதை -

ஆசை

ஆசை அற்றவன் மேல்
ஆசை வைத்தேன்...

அந்த
ஆசையும் அற்றுப்போனது.


- ரூபன்