Monday, May 31, 2010

நீயும்... நானும்...

நீ என்ன பாவம் செய்தாயோ...
என்னை சீடனாய் பெற்றிருக்கின்றாய்.

நான் என்ன புண்ணியம் செய்தேனோ...
உன்னை குருவாய் பெற்றிருக்கின்றேன்.


- சரண்

மனிதனே அழு

மனிதனே அழு..
புத்தனை இழந்ததற்க்கல்ல...
ஏசுவை இழந்ததற்க்கல்ல...
விவேகானந்தரை இழந்ததற்க்கல்ல...

இன்றும் நீ இழக்கிறாயே
அதற்காக...
இன்னொருமுறை அழு.

 - ஒரு தமிழன்

சிறை...

அகமே சிறை என்றறிந்தும்
மானுட மனச்சிறை தகர்க்க - அகமே
புகுந்தாய் நின் கருணையினால்...

மனமே சிறை என்றறியாமல்
நின் செயல் விளங்கா மானுட ஜென்மம் - நின்னை
புறச்சிறை தள்ளி நகைத்தது பொறாமையினால்...

அவர்களுக்கு தெரியுமா?....
எல்லையில்லா நின்னுள்தான்
எல்லாமே இருக்கிறது என்று....

- ஓர் அங்க தேவதை -

ஆசை

ஆசை அற்றவன் மேல்
ஆசை வைத்தேன்...

அந்த
ஆசையும் அற்றுப்போனது.


- ரூபன்

சிரிக்கிறான்...

சிந்திக்கத் தெரியாமல் காயப்படுத்துபவன்...
மனிதன்.

அதிலும் சிரிக்கத் தெரிந்தவன்...
இறைவன்.


- ஒரு தமிழன்

நிழல் யுத்தம்...

எல்லோருமே களத்தில் இருக்கிறோம்...
ஆனால் நீ யுத்தம் செய்வது யாரோடுமல்ல... உன்னோடுதான்..

அதை அறியாமல் காயப்படுத்துகிறோம்...
ஆனால் காயம்படுவது நாமே...

நாம் தாயின் வயிற்றிலிருந்து பிறந்துவிட்டோம்...
ஆனால் நம்மை இன்னமும் மாயை தன் கர்ப்பத்தில்  பாதுகாக்கிறாள்...

- ஒரு தமிழன்

Sunday, May 30, 2010

வினோதம்


இறைவனின் திருவிளையாடல் வினோதமானது...

ஏனெனில்...
அதில் அவனும் மனிதர்களைப் போலவே நடிக்கிறான்...


- ஒரு தமிழன்

Friday, May 28, 2010

மானஸரோவரம்...

மொத்த பிரபஞ்சமும் நீரின் நடுவில்....
மானஸரோவரம்...

- நாகு

தத்துவம்..

படிக்கும் நீயும்..
படிப்பதும்..
படிப்பதைப் படைத்தவனும்...

வேறல்ல ஒன்றான ஈசனே!


- ஒரு தமிழன்

Thursday, May 27, 2010

காதல்...

காதல்...

ஒரு பெண்ணிடம் வரும்போது
நீ காதலன் ஆகிறாய்...

கடவுளிடம் வரும்போது...
நீயே கடவுள் ஆகிறாய்.


- யாரோ

Sunday, May 23, 2010

தெய்வீக நெருப்பு...


நெருப்பொன்று!.. குளிர் காய்கிறது...
விட்டில் பூச்சிகளுக்காக...

- நாகு

Saturday, May 22, 2010

விடியல் எப்போது...



கதிரவனைக் கண்டு தலைநிமிரும்
சூரியகாந்திப் பூக்கள் போல...

உனை எதிர்நோக்கித் தலைநிமிரக்
காத்திருக்கிறார்கள்... நீ வளர்த்த செல்வர்கள்.

அவர்களுக்கு விடியல் எப்போது?

- நான்யார்

நித்யனைப் பிரிந்து...

மீண்டும் உன் பாதங்களை
எப்பொழுது முத்தமிடலாம்
என்று காத்திருக்கின்றன...

உன் வீட்டுக் கலடிச்சுவடுகள்.


- ஒரு தமிழன்

Friday, May 21, 2010

வேறென்ன வேண்டும்...

நினைகின்ற பொழுதெல்லாம் இனிக்கின்ற சுகம் வேண்டும்.
உனை மறக்கின்ற பொழுதெல்லாம் நினைகின்ற வரம் வேண்டும்

எப்போதும் மறக்கவொண்ணா பராபக்தி வேண்டும்
யார் தடுத்தாலும் உனைபிடிக்கின்ற புத்தி வேண்டும்

மனமிலாப் பெருநிலையை எய்த வேண்டும்
நெஞ்சார உன் பூகழைப் பாட வேண்டும்

சிற்றின்பச் சிறையிலிருந்து மீள வேண்டும்
பேரின்பப் பெருவெளியை ஆள வேண்டும்

அறுபத்திமூவர்போல் எனை ஆட்கொள்ள வேண்டும்
மறுபத்து கருவில் நிலைகொள்ளா நிலை வேண்டும்

உன் நாமம் என் நாவில் அமர வேண்டும்
ஐம்புலன்கள் உனைநோக்கிக் குவிய வேண்டும்

அறியாமை எனைவிட்டு அகல வேண்டும்
அதற்குன் கருணைமழை பொழிய வேண்டும்

நீங்காத வினைகளெல்லாம் நீங்க வேண்டும்
என்னகத்துக் கோயிலில் நீ உறைய வேண்டும்

கர்வம் கொள்ளும் என் அகந்தை அழிய வேண்டும்
ராதைபோல் நான் பேதை ஆகவேண்டும்

நால்வர்போல் நான் பாடித்தொழ வேண்டும்
உன்பார்வை என்மீது விழ வேண்டும்

குழந்தைபோல் நான் ஏங்கி அழ வேண்டும்
என்தாயே எனை நீயே காக்க வேண்டும்

என்ன வேண்டும் என்று நீ கேட்க வேண்டும்
வேண்டாத நிலை வேண்டும் என்று நான் வேண்ட வேண்டும்

இவையனைத்தும் நீயெனக்கு அருள வேண்டும்
இதுவன்றி என்வாழ்வில் வேறென்ன எனக்கு வேண்டும்?


- யாரோ -

Wednesday, May 19, 2010

குறையொன்றுமில்லை..

நிறை காணத் தெரியா,
எதிர்மறை குணங்கள் சுமக்கும்
அரை குறை மனங்களின்
கூடாரமாகிவிட்டது...
'நவீன உலகம்'

கரையேறும் வழிகாட்டி
மனச்சிறை தகர்க்க
நீ வந்த பின் - குருவே
குறையொன்றுமில்லை..


- யாரோ -

கலியுக பாரதம்

போர் என்று? போர்களம் எங்கு?

வீரர்களே இல்லாத போர்பூமி...
நிழல் யுத்தமே செய்யும் மாயாவிகள்..

சுதர்சன சக்கரமும் இல்லை...
சங்கு நாதமும் இல்லை..

வெற்று கையுடன் நிராயுதபாணியாய் நீ...

தர்மம் தலைகவிழ...
அதர்மம் தலைவிரித்தாட...

இன்னும் ஏன் மௌனம்?...


- ஒரு தமிழன்

எவர் காப்பாரோ...

பிரச்சினை... பிரச்சினை...
என்று புலம்பும் மானிடப் பிறவியே!..

பிரச்சினை தீர்க்கப் பிறப்பவரையும்
பிரச்சினைக்குள்ளாக்கிவிடுகிறாயே!..

உனை எவர் காப்பாரோ?...


- நான்யார்

ஆலமர அடியினிலே..

சக்தியின் களஞ்சியம்..
வாழ்வின் வழிகாட்டி...
பிறப்பின் ரகசியம்...
இருப்பின் உண்மை...
தேடுதலின் முடிவு...
ஞானத்தின் பாதை...
தியானத்தின் அமைதி...
ஆன்மாவின் இருப்பிடம்...
பிரபஞ்சத்தின் ஒரு வடிவம்...
சத்தியத்தின் இருப்பு..

யான் பெற்ற இவ்வின்பம்..
நீ பெற வேண்டுமோ...

வந்து அமர்ந்து பார்...
ஆலமர அடியினிலே..

- ஒரு அழகன்

Tuesday, May 18, 2010

குருவைத் தேடி...


இருள் கவிந்த இரவுக்குள்
இமைக்காமல் விழித்தாலும்
இருள்மட்டுமே எஞ்சியிருப்பது போல்
எத்தனை முறை கேட்டுப்பார்த்தாலும்
தேங்கியே கிடக்கின்றன எனக்குள்
சில விடையற்ற வினாக்கள் - இருளாய்

"எங்கிருந்து வந்தேன்?"
"ஏன் இங்கு பிறந்தேன்?"
"எதைத்தேடி வாழ்கிறேன்?"
"முடிவில் எங்கே போகிறேன்?"

முக்கியமான கேள்வி..
இவற்றிற்கெல்லாம் விடை தெரிந்தவன்
எங்கே இருக்கிறான்? சொல்லுங்கள்..

"கர்ப்பிணியைப்போல் சுமக்கிறேன்
இக்கேள்விகளின் சுமையை.."

அவன் உதவியோடு இதனை
இறக்கி வைக்க வேண்டும்.
...

- யாரோ -

நானும் இறையாகிறேன்


உருவில் வந்த அருவே - மன
இருளை போக்கும் குருவே!

மனமில்லாத மௌனத்திற்குள்
வார்த்தைகளும் அர்த்தங்களுமற்ற
வெற்றுவெளிக்குள் எனை
நிலைநிறுத்திவிடு - ஏனெனில்

நொடியின் ஆயிரத்தில் ஒருபங்கு காலத்திற்குள்
அறிவினால் அறியமுடியாத அவகாசத்திற்குள்
அசைவேயின்றி ஆயிரமாயிரம் முறைகள்
மனமற்ற வெளியிலிருந்து - மாயையின்
தளத்திற்குள் தூக்கியெறியப்படுகிறேன்

இம்மாயை பொய்யெனத் தெரிகிறது - ஆனால்
நிஜத்திற்குள் பிரவேசிக்கமுடியவில்லை.

அதனால் இறைவா...
நீரில் மூழ்குபவன் கையில் கிடைத்த கயிறுபோல,
உன் பாதங்களை நான் பற்றிக்கொள்கிறேன்.
எனை மெதுவாய் இழுத்து உனக்குள் வைத்துவிடு.

இறையுள் உறையும் இறையாய்
நானும் இறையாகிறேன்.

- யாரோ -

மாயை

வானிலிருந்து
மேகம் ...
மழை ...
துளி ...
பனி ...
குளிர் ...
காற்று ...
ஈரம் ...
கானல் வரை
எல்லாம் உருமாரும் நாடகமே!


- ஒரு தமிழன்

தொடர்கிறதா திருவிளையாடல்...

சிவனே!
சித்தனாக நீ வந்தபோதும்
பின் புத்தனாக வந்தபோதும்
பித்தராக நாங்கள் இருந்ததால்...
வாழ்ந்தபோது உன் அங்கத்தை
கல்லால் அடித்து பங்கத்தை தந்தோம்
செத்த பிறகு உன் பிம்பத்திற்கு
தங்கத்தில் கோவில் செய்தோம்..

கண் கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம்..
இதுவே எங்கள் வாடிக்கையாகிவிட்டது.

இந்த வேடிக்கையே பலமுறை எங்கள் வாழ்கையாகிவிட்டது.

இன்று உனை...

இதய அறைக்குள் வைத்து காக்க வேண்டிய நாங்கள்
இரும்பு சிறைக்குள் வைத்து பார்க்கின்றோம்.

நீ தந்த அறிவை உனக்கே எதிராய் செய்வது
மனிதரின் சூழ்ச்சியா.. அல்லது
மனிதரை தொடர்ந்து அறியாமையில் வைத்திருப்பது
உனது சூழ்ச்சியா?...

விளங்கவில்லை உன் திருவிளையாடல்.

- யாரோ -

UNCLUTCH

ஆலமரத்தடியினிலே அமர்ந்தாய் - நாடி
வந்தோர்க்கு ஞானத்தைத் தந்தாய்

அருணைக்கு மகனாகப் பிறந்தாய்
தரணிக்கே தந்தையாய் மலர்ந்தாய்

நீங்காத நோய்க்கு மருந்தாய் இருந்தாய்
அடங்காத மனதிற்கு மரணம் தந்தாய்

பிறப்பை அறுக்கும் ஓர் உபயம் தந்தாய்
UNCLUTCH - என்றே திருவாய் மலர்ந்தாய்.

- யாரோ -

இதயத்தின் ஓசை

சின்ன சின்ன ஆசை
சிரித்தே இருக்கின்ற உன் முகம் கான ஆசை

சித்தமெல்லாம் ஓர் ஆசை உனையே
சிந்தித்திருக்க ஆசை

சொல்லத் தெரியாத பல ஆசை அதை
சொல்லி முடித்து விட ஆசை - இறைவா

இதுவே என் இதயத்தின் ஓசை

- யாரோ -

அருணையின் புதல்வா...

இச்சை துறந்து - சிறு
கச்சை அணிந்து
பிச்சை உண்டு
உச்சம் கண்ட ஈசா
உனை தஞ்சம் கொண்டேன்
எனை வஞ்சம் கொண்ட
மாய நெஞ்சம் அழிய
கொஞ்சம் கருணை புரி முதல்வா
திருவருணையின் புதல்வா...

- யாரோ -