Wednesday, June 9, 2010

உனக்கென வாழ்வேன்....

உடல் எனும் கூட்டுக்குள் ஒடுங்கி
உள்ளம் எனும் சிறைக்குள் பதுங்கி
நான் வாழ்ந்த வாழ்வில்...

கவலை எனை கிள்ளித் தின்றது... (மணிப்பூரகம்)
பொறாமை எனை அள்ளித் தின்றது... (விசுத்தி)
மிச்சமின்றி அச்சம் ஆட்கொண்டது... (சுவாதிஷ்டானம்)
அன்பின்றி நெஞ்சம் வறண்டது... (அனாகதம்)
காமம் உடலை வேகச் செய்தது... (மூலாதாரம்)
நன்றியும் குன்றி நாளானது... (சஹஸ்ராரம்)
அகம் காரம் ஆனதில் நான் சோரம் போனேன்... (ஆக்ஞா)

மொத்தத்தில் வெய்யிலில் வெடித்த களிமண்ணாய்,
இறுகிய உணர்வுக்குள் கறுகிக் கொண்டிருந்தேன்.

கோடையில் வந்த திடீர் மழையாய்...
கரை உடைத்தோடிவரும் காட்டு வெள்ளமாய்...
சத்தமாய் அடிக்கும் அலைபோல்... - என்
அறியாமையின் மீது சுனாமியாய் மோதினாய்.

மொத்தமாய் விழுந்தவன்,
சுத்தமாய் எழுந்தேன் - மீண்டும்
புதிதாகப் பிறந்தேன் - இனி
உனக்காக வாழ்வேன்.

- யாரோ

No comments:

Post a Comment