நினைகின்ற பொழுதெல்லாம் இனிக்கின்ற சுகம் வேண்டும்.
உனை மறக்கின்ற பொழுதெல்லாம் நினைகின்ற வரம் வேண்டும்
எப்போதும் மறக்கவொண்ணா பராபக்தி வேண்டும்
யார் தடுத்தாலும் உனைபிடிக்கின்ற புத்தி வேண்டும்
மனமிலாப் பெருநிலையை எய்த வேண்டும்
நெஞ்சார உன் பூகழைப் பாட வேண்டும்
சிற்றின்பச் சிறையிலிருந்து மீள வேண்டும்
பேரின்பப் பெருவெளியை ஆள வேண்டும்
அறுபத்திமூவர்போல் எனை ஆட்கொள்ள வேண்டும்
மறுபத்து கருவில் நிலைகொள்ளா நிலை வேண்டும்
உன் நாமம் என் நாவில் அமர வேண்டும்
ஐம்புலன்கள் உனைநோக்கிக் குவிய வேண்டும்
அறியாமை எனைவிட்டு அகல வேண்டும்
அதற்குன் கருணைமழை பொழிய வேண்டும்
நீங்காத வினைகளெல்லாம் நீங்க வேண்டும்
என்னகத்துக் கோயிலில் நீ உறைய வேண்டும்
கர்வம் கொள்ளும் என் அகந்தை அழிய வேண்டும்
ராதைபோல் நான் பேதை ஆகவேண்டும்
நால்வர்போல் நான் பாடித்தொழ வேண்டும்
உன்பார்வை என்மீது விழ வேண்டும்
குழந்தைபோல் நான் ஏங்கி அழ வேண்டும்
என்தாயே எனை நீயே காக்க வேண்டும்
என்ன வேண்டும் என்று நீ கேட்க வேண்டும்
வேண்டாத நிலை வேண்டும் என்று நான் வேண்ட வேண்டும்
இவையனைத்தும் நீயெனக்கு அருள வேண்டும்
இதுவன்றி என்வாழ்வில் வேறென்ன எனக்கு வேண்டும்?
- யாரோ -