Tuesday, May 18, 2010

தொடர்கிறதா திருவிளையாடல்...

சிவனே!
சித்தனாக நீ வந்தபோதும்
பின் புத்தனாக வந்தபோதும்
பித்தராக நாங்கள் இருந்ததால்...
வாழ்ந்தபோது உன் அங்கத்தை
கல்லால் அடித்து பங்கத்தை தந்தோம்
செத்த பிறகு உன் பிம்பத்திற்கு
தங்கத்தில் கோவில் செய்தோம்..

கண் கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம்..
இதுவே எங்கள் வாடிக்கையாகிவிட்டது.

இந்த வேடிக்கையே பலமுறை எங்கள் வாழ்கையாகிவிட்டது.

இன்று உனை...

இதய அறைக்குள் வைத்து காக்க வேண்டிய நாங்கள்
இரும்பு சிறைக்குள் வைத்து பார்க்கின்றோம்.

நீ தந்த அறிவை உனக்கே எதிராய் செய்வது
மனிதரின் சூழ்ச்சியா.. அல்லது
மனிதரை தொடர்ந்து அறியாமையில் வைத்திருப்பது
உனது சூழ்ச்சியா?...

விளங்கவில்லை உன் திருவிளையாடல்.

- யாரோ -

No comments:

Post a Comment